சன் தொலைக்காட்சியில் அழகான தமிழில் செய்திகளை வாசித்து ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் தான் அனிதா சம்பத்.
அதன்பின் மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் வெறுப்பை பெற்றார்.
அந்நிகழ்ச்சிக்கு பின் விஜய்யில் நிறைய நிகழ்ச்சிகள் கலந்துகொண்டு வந்தவர் சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். தனியார் நிகழ்ச்சிகள் பலவும் கலந்துகொள்கிறார்.
ஆன்லைனில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது சகஜமான ஒன்று. ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைனில் அதிக ஏமாற்றம் நடக்கிறது, நாம் ஒன்று அர்டர் செய்தால் வீட்டிற்கு வேறொன்று வருகிறது.
அப்படி தான் அனிதா சம்பத் அமேசானில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஒன்று ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு டெலிவரி ஆனது அழுக்காக மோசமான நிலையில் இருக்கும் ஒரு புடவை.
இந்த தகவலை வீடியோவாக எடுத்து அனிதா சம்பத் பதிவிட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.