உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் வேலை நாட்களை குறைத்து உற்பத்தித்திறணை அதிகரிக்க முயன்று வரும் நிலையில், ஐரோப்பிய நாடொன்று 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.
ஐரோப்பிய நாடான கிரேக்கத்திலேயே வாரத்தில் 6 நாட்கள் வேலை என்ற திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்துள்ளனர். தொழிற்சங்கங்கள் கொடூரத்தின் உச்சம் என்றே இந்த திட்டத்தை குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, மற்ற எல்லா நாகரிக நாடுகளும் வாரத்தின் நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்தை முன்னெடுக்க ஆலோசித்து வரும் நிலையில், கிரேக்கம் மட்டும் வேறு பாதையில் செல்ல முயல்வதாக எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் வணிக சார்பு கொள்கை கொண்ட பிரதமர் Kyriakos Mitsotakis தெரிவிக்கையில், குறைந்து வரும் மக்கள்தொகை மற்றும் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற இரட்டை ஆபத்துகளை எதிர்கொள்ள இந்த முயற்சி அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
2009ல் இருந்தே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் கிரேக்கத்தில் இருந்து சுமார் 500,000 பேர்கள், பெரும்பாலும் பட்டம் பெற்ற இளைஞர்கள் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த 6 நாட்கள் வேலை என்பது, நாளில் 24 மணி நேரமும் இயங்கும் தனியார் தொழில்களுக்கு மட்டும் பொருந்தும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட வேலை வாரத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட தொழில்கள் மற்றும் உற்பத்தி வசதிகளில் உள்ள ஊழியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் அல்லது கூடுதல் எட்டு மணி நேர ஷிப்ட் வேலை செய்ய வாய்ப்பளிக்கப்படும்.
அத்துடன் தினசரி ஊதியத்துடன் சேர்த்து 40 சதவிகிதம் கூடுதல் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், போராட்டங்களும் வெடித்துள்ளன.
பெரும்பாலான கிரேக்க மக்களின் சராசரி மாத ஊதியம் என்பது 900 யூரோ, இது ஒவ்வொரு மாதமும் 20ம் திகதி வரையே போதுமானதாக உள்ளது என்றும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் தற்போதைய இந்த 6 நாள் வேலை திட்டம் என்பது தொழிலாளர் பற்றாக்குறை என்ற அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்கப் போவதில்லை என்றும்
வேலையில்லாத இளம் கிரேக்கர்களுக்கு இது மிகவும் நியாயமற்றது எனவும் அவர்களுக்கு ஒருபோதும் வேலை கிடைக்கப் போவதில்லை என்றும் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.