தளபதி விஜய் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் GOAT. இப்படத்திற்கு பின் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். அவர் அரசியல் செல்லும் காரணத்தினால் இதுவே அவருடைய கடைசி படமாக இருக்கும் என்கின்றனர்.
தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. நடிகை சமந்தா தான் விஜய்க்கு இப்படத்தில் ஜோடி என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் விஜய்யுடன் சமந்தா இணைந்து நடித்துள்ள நிலையில், தளபதி 69 மூலம் இந்த ஜோடி 4வது முறையாக திரையில் இணையவுள்ளதாக பேசப்படுகிறது.
மேலும் KVN தயாரிப்பு நிறுவனம் தான் தளபதி 69 படத்தை தயாரிக்கப்போகிறார்கள் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விஜய்யின் கடைசி படத்தின் இசையமைப்பாளர் குறித்து இதுவரை எந்த ஒரு தகவல் வெளிவரவில்லை.
ஆனால், தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், தளபதி 69 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.