அமெரிக்காவின் டிரான்கள்கருங்கடல் மீது அதிகரித்துள்ளதால் நேட்டோவுடன் நேரடி மோதல் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கருங்கடலில் அமெரிக்க டிரோன்களின் ஆத்திரமூட்டல்களுக்கு உடனடி பதிலடி நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவ் (Andrei Belousov) அழைப்பு விடுத்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், ”இதுபோன்ற விமானங்கள் ரஷ்ய வான் மற்றும் விண்வெளிப் படை விமானங்களுடன் வான்வெளி சம்பவங்களின் வாய்ப்பை பெருக்குகின்றன. இது கூட்டணிக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நேரடி மோதலின் அபாயத்தை அதிகரிக்கிறது” என கூறப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்ய பிரதேசத்தில் உக்ரைன் இலக்குகளைத் தாக்குவதற்கு உதவ, அமெரிக்க விமானங்களைப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் உக்ரைனில் உள்ள மோதலில் கீவ் ஆட்சியின் தரப்பில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் பெருகிய ஈடுபாட்டை இது எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய வலைப்பதிவாளர்கள் (Bloggers) ஒரு அமெரிக்க குளோபஸ் ஹாக் உளவு விமானத்தை கருங்கடலில் ஒரு ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறினர்.
Comments are closed.