சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்திலேயே எச்சிலை துப்பும் தமிழக அமைச்சர்

16

தமிழக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்தின் கீழேயே எச்சிலை துப்பும் அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ பரவி வருகிறது.

கடந்த 20 -ம் திகதி கூடிய தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. இரு வேளைகளும் பல்வேறு துறை மீதான விவாதம் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து வருகின்றனர்.

இதனிடையே, அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிவாரி குறித்து பேசிய கருத்துக்களும் சர்ச்சையானது. அப்போது, சபாநாயகர் அவரை கடுமையாக விசாரித்தார். அமைச்சர்கள் பேசும்போது கவனமாக பேசுங்கள் எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், நேற்று சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அமர்ந்திருந்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் தான் அமர்ந்திருக்கும் இடத்தின் கீழேயே எச்சிலை துப்புகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Comments are closed.