தாய் மகள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்: சந்தேகநபரை மடக்கி பிடித்த பொலிஸார்

16

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் தாய், மகள் இருவரையும் கத்தியால் தாக்கி விட்டு ஹபாயா அணிந்து தப்பிக்க முயன்றவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (26)மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தாக்குதளுக்கு உள்ளன தாய் (54) ,மகள் (31) இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், தாய் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலும், மகள் கந்தளாய் தளவைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஈச்சநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடனுக்கு பணம் வாங்கிய நிலையில், அதனை மீளப் பெறுவதற்காக தாக்குதலுக்கு உள்ளான தாய் சென்று கேட்டுள்ளார்.

இதனை பொருட்படுத்தாது உரிய தாயின் வீட்டுக்கு சென்று கத்திக்குத்து தாக்குதலை நடாத்தி விட்டு தப்புவதற்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபர் முகத்தை மூடி ஹபாயா அணிந்து தப்பிச்செல்ல முயற்சித்த நிலையில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments are closed.