முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

0 0

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் இடையே மூன்று வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில்”அமைதியை நோக்கி செல்வதற்கான தீவிர பேச்சுவார்த்தை நடத்த தயார். மே 15ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தலாம்” என ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியதாவது: உக்ரைன் உடன் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இப்போது முடிவு உக்ரைன் அதிகாரிகள் கையில் இருக்கிறது. அவர்கள் தங்கள் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.