ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

0 0

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஷுபம் (Shubham Dwivedi, 31).

திருமணமாகி மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில், ஷுபம் மற்றும் அவரது மனைவியான ஐஷன்யா (Aishanya Dwivedi), தங்கள் குடும்பத்துடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.

அப்போது திடீரென கையில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதி ஒருவன், இந்துக்களை குறிவைத்து தாக்கியுள்ளான். தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஷுபமும் ஒருவர்.

இந்நிலையில், இன்று அதிகாலை இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள தீவிரவாத தளங்களை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தியது.

தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சிறிது நேரத்தில், பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ஷுபமுடைய மனைவியான ஐஷன்யா, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஐஷன்யா, எனது கணவரின் மரணத்துக்கு பழி வாங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.

எங்கள் முழுக் குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. அவர் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்ததன் மூலம் எங்கள் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டார்.

இது என் கணவருக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி ஆகும். என் கணவர் எங்கிருந்தாலும், இன்று அவரது ஆன்மா சாந்தியடையும் என்று கூறியுள்ளார் ஐஷன்யா.

Leave A Reply

Your email address will not be published.