விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.
பிரபல DJ வசி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மிகவும் கோலாகலமாக இவர்களுடைய திருமணம் நடந்தது. திருமண புகைப்படங்களும் ரசிகர்களிடையே வைரலானது.
விஜய் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பிரியங்கா ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நிகழ்ச்சியின் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க, பிரியங்கா ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.