புற்றுநோயுடன் போராடும் நடிகருக்கு பெரிய தொகையை கொடுத்த KPY பாலா

0 0

விஜய் டிவி காமெடி ஷோக்கள் மூலமாக பிரபலம் ஆனவர் பாலா. அவர் தான் சம்பாதித்த பணத்தை கொண்டு கஷ்டத்தில் இருக்கும் பலருக்கும் உதவி செய்து வருகிறார். மேலும் தற்போது ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல காமெடி நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடக்க கூட முடியாத நிலையில், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.

நடிகர் சுப்பிரமணி தற்போது புற்றுநோய் 4ம் நிலையில் இருக்கும் நிலையில் அவருக்கு தான் 75 ஆயிரம் பணம் கொடுத்து உதவி இருப்பதாக பாலா கூறி இருக்கிறார்.

மற்றவர்களும் அவருக்கு உதவ வேண்டும் எனவும் அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.