புற்றுநோய்க்கான சிகிச்சை காரணமாக ஏற்பட்ட பக்க விளைவுகளால் பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றின் மூலம் நேற்று(27.03.2025) வெளிப்படுத்தியிருந்தது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் மன்னர் 3ஆம் சார்ள்ஸ் தான் கண்டறியப்படாத ஒரு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
அப்போதிலிருந்தே அவர் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை தொடங்கியிருந்தார்.
பக்க விளைவுகள் ஏற்பட்டமைக்கான காரணத்தை அரண்மனை வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவை தற்காலிகமானவை எனவும் சிறிய வைத்தியசாலை கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், மன்னர் 3ஆம் சார்ள்ஸ் தற்போது குணமடைந்து வருவதாகவும் இது போன்ற நேரங்களில் பக்க விளைவுகள் பொதுவானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னரின் நேர அட்டவணைகளில் இதனால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னர் 3ஆம் சார்ள்ஸின் மருமகளும் வேல்ஸ் நாட்டு இளவரசியுமான கெத்ரினும் கடந்த ஆண்டு தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிவித்திருந்தார்.
எனினும், சில மாதங்கள் நடத்தப்பட்ட கீமோதெரபி(chemotherapy) மூலம் அவர் இப்போது பூரண குணமாகியுள்ளார்.