வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெருமளவு இலங்கையர்கள்

0 9

குவைத் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இலங்கை கைதிகள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குவைத் – இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த கைதிகள் குவைத் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் போதைப்பொருள் பயன்பாடு, போக்குவரத்து, கடத்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதித்துறை செயல்முறைக்கு பரிந்துரைக்கப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குழுவாகும்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படும் கைதிகள் வெலிக்கடை மகசின் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.

குவைத் – இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், 52 இலங்கை கைதிகள் இரண்டு சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.