நடிகை சாய் பல்லவிக்கு இரவு ஆனால் இப்படி ஒரு பழக்கம் உள்ளதா?.. என்ன காரணம்?

0 11

ஒரு நாயகி என்றால் வெள்ளையாக, பிட்டாக, பளபளவென முக அழகுடன் இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நேரம்.

அந்த காலகட்டத்தில் நாயகிக்கான எந்த பந்தாவையும் காட்டாமல் மிகவும் சிம்பிளாக அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை அசத்தியவர் தான் நடிகை சாய் பல்லவி.

அதற்கு உதாரணமாக சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான அமரன் படத்தை கூறலாம்.

ரசிகர்களை தூங்க விடாமல் தனது நடிப்பின் மூலம் கட்டிப்போட்ட நடிகை சாய் பல்லவியால் இரவு 9 மணிக்கு மேல் முழித்துக்கொண்டு இருக்க முடியாதாம்.

காரணம் குறித்து அவர் ஒரு பேட்டியில், நான் இரவு 9 மணிக்கு தூங்கி, காலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். நான் ஏன் காலை 4 மணிக்கு எழுந்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் படிப்பு – வேலை என ஓட ஆரம்பித்தபோது எனக்கு இந்த பழக்கம் தொடங்கியது.

நான் ஜார்ஜியாவில் படித்துக்கொண்டிருக்கும் போது காலை 3.30 மணியளவில் எழுந்து படிக்கும் பழக்கம் இருந்தது, அதனால் இந்த முறை என் உடலுக்குப் பழகிவிட்டது.

பல படப்பிடிப்புகளில் இரவு 9 மணிக்கு மேல் சென்றால் அடம் பிடித்தாவது நான் தூங்க சென்றுவிடுவேன் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.