தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திற்கு முற்றாக அடிபணிந்துள்ளதாக சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு இன்றைய தினம் (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பொம்மையாக மாறிப் போயுள்ளது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு முற்றாக அடிபணிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.