கணே முல்ல சஞ்சீவ கொலை : நீதிபதியிடம் பெறப்பட்டது வாக்குமூலம்

0 1

வழக்கறிஞராக மாறுவேடமிட்டு நீதிமன்ற அறைக்குள் நுழைந்து பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்தமை தொடர்பான மற்றொரு வலுவான நேரில் கண்ட சாட்சி, அப்போது நீதிமன்றத்திற்கு தலைமை தாங்கிய தலைமை நீதிபதி ஆவார்.அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு (colombo)பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் மூலம் எழுத்துபூர்வ அனுமதியைப் பெற்ற பின்னர் இது நடந்தது.

அந்த அறிக்கையுடன், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவால் நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக கிட்டத்தட்ட 50 நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கொலை உள்ளிட்ட ஏராளமான குற்றங்களில் ஈடுபட்ட பாதாள உலகக் கும்பல் தலைவரான சஞ்சீவ குமார சமரட்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ, கடந்த மாதம் 19 ஆம் திகதி பூசா சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு கொழும்பில் உள்ள அளுத்கடேநீதிமன்றுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

வழக்கறிஞர் வேடமிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தவர் சிறைக்கூண்டில் நின்ற கணேமுல்ல சஞ்சீவவை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு துப்பாக்கியை அந்த இடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.