நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களில் பெப்ரவரி 01, 2025 அன்று 18 வயது நிரம்பியவர்கள், வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 31, 2007 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்த அனைத்து நபர்களும் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார்கள்.
இந்த முடிவை முறைப்படுத்த, உள்ளூராட்சி தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 76(a) மற்றும் வாக்காளர் பதிவுச் சட்டத்தின் பிரிவு 24(a) ஆகியவற்றின் கீழ், ஆணையகம் வர்ததமானியில் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூடுதலாக, ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்திற்கும் பரிந்துரைக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான வைப்புத் தொகைகள் பற்றிய விவரங்களையும் ஆணையகம் வெளியிட்டுள்ளது.
வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்திற்கும் நியமனப் பட்டியல்கள் பிரிவு விகிதாசார மட்டங்களில் தயாரிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு நியமனப் பட்டியலிலும் இளைஞர் பிரதிநிதித்துவம் 25 சதவீதத்தை தாண்ட வேண்டும் என்றும் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பாலின பிரதிநிதித்துவத் தேவைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதோடு, பிரதேச அளவிலான வேட்புமனு பட்டியல்களில் குறைந்தது 25 சதவீத பெண் வேட்பாளர்கள் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் விகிதாசார வேட்புமனு பட்டியல்களில் 50 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.