பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கவில்லை : நீதியமைச்சர்

16

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கட்சியின் அரசியல் உயர் பீட கூட்டத்தின் போது அமைச்சர் விஜயதாச ராஜபகக்ச இதனை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அமைச்சர் விஜயதாச ராஜபகக்ச, ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயதாச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த நிலையிலேயே இந்த அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Comments are closed.