தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர்களை பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்த ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ரக்ட் பிரம்மாண்டம் எனும் வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த வெப் தொடரையும் ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள்.மேலும் சமந்தாவே தயாரித்து கதாநாயகியாக நடிக்கும் பங்காராம் திரைப்படமும் விரைவில் துவங்கவுள்ளது.
இந்த நிலையில், நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதன் காரணமாக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 101 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் தற்போது ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.