இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை

0 0

இந்த ஆண்டு பாதீட்டில் அரச ஊழியர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தங்கள், அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் பலவீனமான பொருளாதார மீட்சி தடைப்படக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம், இன்று (4) எச்சரித்துள்ளது.

அநுர குமார திசாநாயக்கவின் முதல் பாதீடு, பொதுத்துறை சம்பளத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், நாட்டின் நலிந்த நிதிகளை சரிசெய்யும் முயற்சியாக நீண்டகால சலுகைகளில் ஆழமான குறைப்புக்களையும் செய்துள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் முக்கிய மருத்துவர்கள் சங்கம் தங்கள் கொடுப்பனவுகளில் குறைப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை முதல் பணி நிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஆசிரியர்களும் பணி நிறுத்தங்களை பரிசீலித்து வருகின்றனர். எனினும், இலங்கையின் சிக்கனத் திட்டத்திற்கான “கடைசி பெரிய உந்துதல்” இந்த பாதீடு என்றும், அதன்பிறகு, முன்னோக்கிச் செல்வது மிகவும் எளிதாக இருக்கும் என்றும், சர்வதேச நாணய நிதிய குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர் கூறியுள்ளார்.

அத்துடன் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர், சீர்திருத்தங்களுடன் இணைந்து கொள்வது, இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழி” என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.