நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சந்தேக நபர் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்

0 6

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் தொடர்புடைய துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனாராச்சி 2024 டிசம்பர் 13 ஆம் திகதி கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் இந்த துப்பாக்கிச் சூடு, திட்டமிடப்பட்டது என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கொழும்பு குற்றப்பிரிவு சந்தேக நபரை 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்த பின்னர் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

27 வயதான சந்தேக நபர், 2025 பெப்ரவரி மாதம் கொழும்பு நீதிமன்றத்திற்குள், ஒரு சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.