நடிகை சாய் பல்லவி கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியான நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு அமரன் படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் தண்டேல் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இதை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் பிரம்மண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம்தான் ராமாயணா. நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகிறார். மேலும் யாஷ் இப்படத்தில் ராவணனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வருவதாக கூறப்படுகிறது.
அப்படியிருக்க, தற்போது நயன்தாராவை விட சாய் பல்லவி அதிக சம்பளம் பெற்றுள்ளார் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ராமாயணா திரைப்படங்களின் முதல் பாகத்திற்கு மட்டுமே ரூ. 15 கோடி சம்பளமாக சாய் பல்லவி வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.