இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

0 4

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல் வரும் வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, கந்தகெட்டிய, ஊவா பரனகம, மீகஹகிவுல, சொரணதொட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது கடந்த (28) பிற்பகல் 12.30 மணி முதல் நேற்று (01) பிற்பகல் 12.30 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த, நிலையிலே மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.      

Leave A Reply

Your email address will not be published.