மினுவாங்கொடை (Minuwangoda) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான பெண் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை கணேமுல்ல சஞ்சீவ கொலையை திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மே என்பவரின் நெருங்கிய ஒருவர் மீதே மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
மினுவாங்கொடை – பத்தடுவன சந்தியில் முச்சக்கர வண்டி நிறுத்தும் இடத்தில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், 36 வயதான லஹிரு ரந்தீர் காஞ்சன என்ற முச்சக்கர வண்டி சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரமையாளரான பெண்ணும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.