அதிபர் – ஆசிரியர் சம்பள உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்

0 2

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் (25) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சம்பள உயர்வுடன், சம்பள தரங்களில் 07ஆவது இடம் பாடசாலை அதிபர்களுக்கும், 08வது இடம் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் சம்பளத்தை மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், அது நிறைவேற்றப்படவில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் அது அப்படியல்ல. பாடசாலை அதிபர்களின் சம்பளம் 30,105 ரூபாயாலும், ஆசிரியர்களின் சம்பளம் 25,360 ரூபாயாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பள தரங்களில் 07ஆவது இடம் பாடசாலை அதிபர்களுக்கும், 08வது இடம் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், முன்பள்ளி கல்வியிலிருந்து பல்கலைக்கழக கல்வி வரையிலான கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 6,019 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பிற்காகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.