நாட்டில் நிலவும் உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலையைப் பொறுத்து பாடசாலைகளில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் சிலவற்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு (Ministry of Education) இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அமைச்சு (Ministry Of Health) இது குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சுக்கும் அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அதிக வெப்பமான நாட்களில் மாணவர்கள் வெளிப்புற அல்லது விளையாட்டு மைதான செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் வலுவான சூரிய ஒளியுடன் வெளியில் நேரத்தை செலவிடுவதும் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிக நீர் பருகுவது மற்றும் சோர்வை நீக்குவதற்காகவும் இரண்டு குறுகிய ஓய்வு நேரங்களை வழங்குவது சிறந்ததாகும்.
அதிக வெப்பமான நேரங்களில் தேவையற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்வதைத் தவிர்த்தல் (பாடசாலை மற்றும் வீடு).
அதிக வெப்பமான நாட்களில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் தவிர்த்தல்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.