தொடருந்தில் மோதுண்டு ஆறு யானைகள் பலி!

23

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த தொடருந்தில் மோதுண்டு ஆறு யானைகள் பலியாகியுள்ளன.

மீனகயா என்ற தொடருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்படுகின்றது.

ஹபரன கல்ஓய தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் யானைக் கூட்டமொன்று தொடருந்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் ஹபரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடருந்தில் பயணம் செய்த பயணிகள் வேறு தொடருந்து மூலம் கொழும்பு பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தண்டவாளங்கள் தடம்புரண்டதில் தொடருந்து பாதைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.