சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டித்தொடரின் முதல் ஆட்டத்தில் நேற்று (19) நியூஸிலாந்து அணி, 60 ஓட்டங்களால் பாகிஸ்தானிய அணியை தோற்கடித்துள்ளது.
கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, தமக்கான 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களை பெற்றது.
இதில் வில் யொங் 107 ஓட்டங்களையும், டொம் லத்தொம் 118 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 260 ஒட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் 60 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பாகிஸ்தானிய அணிக்காக பாபர் அசாம் 64 ஓட்டங்களையும், குஸ்தில் சா 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதேவேளை இன்று போட்டித்தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் களமிறங்குகின்றன.
Comments are closed.