முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, பாதுகாப்புப் படையினர் தங்கவைக்கப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் தொடர்பான கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.