நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் நட்டம் – அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

0 7

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மின்வெட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

இதனால் நாடு முழுவதும் மின் விநியோகத்தில் பெரும் தடங்கலை ஏற்படுத்தியதாகவும் இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

அரச தரப்பு மின்வெட்டுக்கு காரணம் குரங்கு என்றும் பின்னர் நுரைச்சோலையில் ஏற்பட்ட பழுது என தெரிவித்தாலும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துக்கள் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

இந்நிலையில், மின்சக்தி அமைச்சும் இலங்கை மின்சாரசபையும், மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமும் மின் வெட்டு தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளன.

இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது அவற்றுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. குறுகிய கால நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மின் தடையால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் இதுவரையில் மின்சாரசபை எவ்வித அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை எனவும் நட்டம் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.