சீனாவின் நாணய மாற்று வசதியை மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்த இலங்கை

0 2

இலங்கை மத்திய வங்கிக்கும் சீன(China) மக்கள் வங்கிக்கும் இடையில் இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்தல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இந்தநிலையில், அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு குறித்த இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை, இரண்டு வங்கிகளும் புதுப்பித்துள்ளன.

இது, 10 பில்லியன் யுவான் (சராசரியாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) நாணய மாற்று வசதியின் அடிப்படையில், இலங்கைக்கும் சீனாவுக்கும்(China) இடையில் நிதி ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க, இலங்கை மத்திய வங்கியின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதே நேரத்தில் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் பான் கோங்செங், சீன மக்கள் வங்கியின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.