நடிகர் என்பதை தாண்டி தனது கனவை நோக்கி பயணம் செய்வதில் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அஜித்.
துபாயில் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் தனது குழுவுடன் கலந்துகொண்ட அஜித் சூப்பராக விளையாடி 3வது இடத்தை பிடித்தார்.
அவரது இந்த வெற்றியை தமிழகமே கொண்டாடியது, இப்போது வெளிநாட்டில் அடுத்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
துபாயில் போட்டியை முடித்தவர் நிறைய பேட்டிகள் கொடுக்கிறார்.
அப்படி ஒரு பேட்டியில், சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது, அதுவும் இரவு நேர போட்டியாக நடந்தது. இதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
இந்தியாவில் மோட்டார் ஸ்ட்போர்ஸ்க்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறது என பேசியுள்ளார்.
Comments are closed.