சுந்தர் சி – விஷால் – சந்தானம் கூட்டணியில் உருவாகி வெளிவந்த ஆம்பள திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ஆனால், அதை தற்போது மதகஜராஜா திரைப்படம் மிஞ்சுயுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
அந்த அளவிற்கு இவர்களுடைய கம்போ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்திருந்தாலும் கூட மக்கள் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டி வருகிறார்கள்.
ஜெமினி நிறுவனம் தயாரித்து இருந்த இப்படத்தில் அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்த நல்ல வரவேற்பை பெற்று வரும் மதகஜராஜா திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்காக கதாநாயகன் விஷால் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஷால் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். மேலும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 15 கோடி என சொல்லப்படுகிறது.
Comments are closed.