13 ஆண்டுகள் கழித்து வெளிவந்தாலும், மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெறமுடியும் என காட்டியுள்ளது மதகஜராஜா திரைப்படம்.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான இப்படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்து இருந்தனர். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் மறைந்த நடிகர்கள் மனோபாலா, மணிவண்ணன் ஆகியோரை மீண்டும் திரையில் பார்க்க முடிந்தது. நகைச்சுவையில் மக்கள் மனதை கவர்ந்த இப்படம் உலகளவில் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மதகஜராஜா திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது.