ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தை பிறக்கவுள்ள நிலையில் தைப் பொங்கலுக்கு பிறகு குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சவாலான மாதமாக அமையும்.
கிரக நிலைகள் மற்றும் இயக்கத்தின் மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்குச் சிரமங்கள் அல்லது மனக்கவலைகள் ஏற்படலாம். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது தொழில்துறையில் சிரமங்களைச் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே தை மாதத்தில் சவால்களை எதிர்கொள்ளப் போகும் தனுசு, மிதுனம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்களின் வாழ்க்கை நிலையைப் பார்க்கலாம்.
இந்த ராசிக்காரர்கள் பொங்கலுக்குப் பிறகு உடல் நலத்தில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையில் எதிர்பார்க்காத செலவுகள் அதிகரிக்கும்.
இவர்களுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே நீங்கள் செலவுகள் கட்டுப்படுத்திச் சரியான திட்டத்தைக் கையாண்டால் நிச்சயம் பிரச்சனையைச் சமாளிக்கலாம்.
மிதுன ராசிக்காரர்கள் தைப் பொங்கலுக்குப் பிறகு சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் மற்றும் உறவில் மனக்கசப்புகள் வரலாம்.
பிரச்சினைகளை சமாளிக்க உங்கள் மௌனம் சிறந்ததாக இருக்கும். உங்கள் மனதில் பரஸ்பர புரிதல் மற்றும் நல்ல தொடர்பு இருந்தால் எவ்வித பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு பொங்கல் கழித்து அடுத்துவரும் நாட்களில் சில மனக்கசப்புகள் உண்டாகும்.
குறிப்பாகத் தொழில்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் சில விடயங்களில் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் மற்றும் உறவில் மனக் குழப்பம் வரும்.
எனவே நேரம் அறிந்து சரியான முடிவை எடுப்பது நல்லது. தேவையற்ற பேச்சுக்களைக் குறைத்து விட வேண்டும்.
Comments are closed.