2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அவ்வாரமே இலவச சீருடை விநியோகமும் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) அறிவித்துள்ளது.
இலவச சீருடை விநியோகம் தொடர்பான நடைமுறை விதிகள் தொடர்பான சுற்றறிக்கை சகல பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலவச சீருடைகள் வலய, கோட்டக் கல்வி அதிகாரிகளால் பாடசாலை அதிபர்களுக்கு கையளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 10,000 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் சுமார் 40 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இவர்களுக்கான சீருடைத்துணிகள் முழுவதையும் மக்கள் சீனக்குடியரசு இலவசமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.