மாணவர்களுக்கு இலவச புள்ளி: சர்சைக்குள்ளான மற்றுமொரு பரீட்சை வினாத்தாள்

0 2

இந்த ஆண்டு வடமேற்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான தரம் 10 ஆங்கில வினாத்தாள் ஏராளமான பிழைகளுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தவிசாளர் பிரியந்த பெர்னாண்டோ தெரித்துள்ளார்.

முதல் ஆங்கிலத் தாளின் கேள்வி எண் மூன்று (3) இன் கீழ், வரைபடம் இல்லாமல் படத்தின்படி பதில் அளிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டாவது தாளில் பதில் அளிக்க முடியாத நிலையில் மூன்று கேள்விகள் பிழையாக இருந்ததாகவும் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது வினாத்தாளின் கேள்வி 1 இன் படி வார்த்தைகளைக் கொடுக்காமல் வெற்றிடங்களை நிரப்பவும், அகராதிப் பக்கத்தைப் பார்த்து 18 வது கேள்விக்கு பதிலளிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், அகராதிப் பக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தவிசாளர் கூறியுள்ளார்.

இந்த வினாத்தாளில் உள்ள பல கேள்விகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தவணை பரீட்சையில் வழங்கப்பட்ட வினாத்தாளின் நகல் என்றும் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இரண்டாவது வினாத்தாளில் உள்ள மூன்று தவறான கேள்விகளுக்கு ஒவ்வொரு மாணவர்களுக்கும் இருபது மதிப்பெண்கள் வழங்குமாறு வடமேற்கு மாகாண பாடப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளதாக பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் பிரிவின் (தரம் 0) கீழ் மட்டும் 47,000 வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் 100,000 ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தவிசாளர் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கல்வியில் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் குறித்து அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், வீண் விரய அதிகாரிகளுக்கு மாணவர்கள் பலியாகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.