கொழும்பிலிருந்து (Colombo) வவுனியா (Vavuniya) நோக்கிப் பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து யாழ்ப்பாணம் (Jaffna) ஏ9 பிரதான வீதியில், மதவாச்சி வஹமல்கொல்லேவ பகுதியில் நேற்றைய தினம் (08.01.2025) இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மதவாச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹமல்கொல்லேவ, ரம்பாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்தள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் ரம்பேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல் நிலைய, போக்குவரத்து காவல்துறைப் பிரிவினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments are closed.