இஸ்ரோவின் புதிய தலைவராக மீண்டும் ஒரு தமிழர் நியமனம்

0 3

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) (ISRO) புதிய தலைவராக வி. நாராயணன் (V Narayanan) நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) முதல் சந்திரயான் 3 இன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் வரை பல தமிழர்கள் இஸ்ரோவில் சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organisation (ISRO) எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார்.

இவரது பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது.

எதிர்வரும் 14-ம் திகதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.

இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக தற்போது வி.நாராயணன் உள்ளார். இவர் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.