ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் : எம்.பி.க்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

0 6

அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணத்தை மீளப் பெற்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்(cid) இன்று (06) கொழும்பு(colombo) நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காதிலக்க, இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

அத்துடன், விசாரணைகளுக்கு அவசியமானால் நீதிமன்றத்திடம் மேலதிக உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.