மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவதானம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, பல்வேறு நிறங்களில் மின்விளக்குகள் மற்றும் பல்வேறு தொனிகள் கொண்ட ஹோர்ன்களை பயன்பத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவையற்ற உபகரணங்களை பொருத்தியுள்ள வாகனங்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.