இதனை செய்தால் மட்டுமே ஆதரவு…அநுர அரசுக்கு சுமந்திரன் விதிக்கும் நிபந்தனை

0 5

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றினால் மாத்திரமே அரசாங்கத்தின் அரசியலமைப்பு தயாரிப்பிற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கை தமிழரசு கட்சி கட்சியின் ஊடகப் பேச்சாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்பன உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அதற்கான பணிகளை ஆரம்பித்ததன் பின்னரே அறிவிக்க முடியும் என்றும் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தயாரிப்பை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜே.வி.பி.யின் உறுப்பினர்களும் புதிய அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதற்கான கூட்டங்களில் கலந்துகொண்டதாகவும், பொதுத் தேர்தலின் பின்னர் மூன்று தடவைகள் தான் ஜனாதிபதியை சந்தித்து புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.