கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

0 2

கொழும்பு பங்கு சந்தையின் (CSE) அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 16,049.42 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 299.13 ஆக இன்று பதிவாகியுள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 11.48 பில்லியனாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது

கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் இன்று (02.01.2025) 16,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிகரிப்பு வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, பங்கு விலைக் குறியீடு 16,151.20 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், S&P தரப்படுத்தல் குறியீடு SL20 சுட்டெண்ணின் படி, 2024 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையின் வளர்ச்சி 58.46 வீதமாகவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.