முறையாக வரி செலுத்தினாலே குரங்கு பிரச்சினைக்கு தீர்வு : அசோக ரன்வல

0 2

நாட்டில் வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் வரி செலுத்தினால் மட்டுமே சமூகத்தின் பயனாளிகள் குறிப்பிட்ட பணியைச் செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல (Asoka Ranwala) தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த காலத்தில் ஒரு நாடாக இந்த வரிப்பணத்தை வசூலிக்க முடியாமல் பாரிய அவலத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கம்பஹாவில் (Gampaha) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரசாங்கத்தின் திறைசேரி அதல பாதாளத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் மிகவும் சிரமப்படுகின்றதாக குறிப்பிட்டார்.

எனது நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் (India) இருந்து குரங்குப் பிரச்சினைக்கான தீர்வை அறிந்து கொண்டு வந்துள்ளதாகவும், கருத்தடை செய்து சிறிது நாட்களுக்கு உணவு கொடுத்து பராமரித்து குரங்குகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை முறையாக மக்கள் வரியைச் செலுத்துவதால் அரசாங்கத்தின் திறைசேரிக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.