2024 இல் இலங்கையை நோக்கி படையெடுத்த சுற்றுலாப்பயணிகள் : எந்த நாட்டிலிருந்து தெரியுமா !

0 3

2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,053,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 416,974 என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்தோடு, ரஷ்யாவிலிருந்து 201,920 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 178,339 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 136,084 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் சீனாவிலிருந்து 131,681 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சுற்றுலாத் துறையில் (Sri Lanka Tourism) குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நிகழ்வு ஒன்று அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.