முன்னாள் சபாநாயகர் ஒரு மருத்துவர் என்ற யாழ் எம்.பி : தென்னிலங்கையில் கிளம்பிய சர்ச்சை

0 2

பதவி விலகிய முன்னாள் சபாநாயகர் ஒரு மருத்துவர் என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K.Ilangumaran) தெரிவித்த கருத்துக்கள் தென்னிலங்கையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போலி கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ரன்வெல சமீபத்தில் பதவி விலகினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த க.இளங்குமரன், “இல்லை, இந்த வைத்தியர் பட்டம் அவரால் வழங்கப்படவில்லை, மக்களால் உருவாக்கப்பட்டது.

அவர் 1989 இல் ஜப்பானுக்குச் சென்றார், மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஜப்பானில் மருத்துவம் படித்தார்.

அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, நாடாளுமன்ற சபாநாயகராக மருத்துவ முனைவர் பட்டம் பெற வேண்டிய அவசியம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த விடயத்தை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.