ஐ.தே.கவை அழிக்க இடமளியோம்! ரவி கருணாநாயக்க எம்.பி. திட்டவட்டம்

21

ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாகப் பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். எனவே, ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காகக் கட்சியை அழிக்க இடமளிக்க முடியாது.

மக்களின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும். கட்சியை விட்டுச் சென்றவர்களும் மீள வரவேண்டும். ஒரு சிலருக்காக எமது கட்சியைப் பணயக் கைதியாகப் பயன்படுத்த இடமளிக்க முடியாது.

இந்த நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியாகும். அக்கட்சியை பழைய நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டள்ளார்.

Comments are closed.