முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குவாதமொன்றில் ஈடுபட்ட காணொளியொன்று சமூக வலைதளங்களில் வைராலி வருகின்றது.
அண்மையில் கொழும்பில் உள்ள CH & FC கிளப்பில் ஹரின் பெர்னாண்டோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்திலிருந்து வெளியேறும் ஹரின் கத்திக் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது குறித்த செயற்பாட்டால் கிளப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் காவல்நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக தரங்களுக்கு இணங்குவதற்காக காணொளியில் உள்ள அனைத்து தகாத வார்த்தைப் பிரயோகங்களும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.