அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

0 2

2025 ஆம் ஆண்டுக்கான அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி அரச உத்தியோகத்தர்களுக்கு 4000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் செயலாளர்  எஸ்.அலோக பண்டார (S. Aloka Bandara) விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்பணம் வழங்கும் நடவடிக்கை 2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி தொடங்கி பெப்ரவரி 28 அன்று முடிவடையும் என்றும் குறித்த  சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திகதிக்கு பின்னர் பணம் செலுத்தக் கூடாது என அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் எஸ்.அலோக பண்டார அறிவித்துள்ளார்.  

Leave A Reply

Your email address will not be published.