முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின்( Manusha Nanayakkara) சகோதரர் திசர ஹிரோஷன நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (28.12.2024) இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனுஷ நாணயக்காரவின் சகோதரன் மொனராகலை, பிபில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.