வங்கி கடன்கள் பெற்றுள்ளவர்களுக்கு வெளியான நற்செய்தி

0 2

25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பெறுபவர்களில் 99% பேர் வங்கிகளுடன் தங்கள் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பணம் செலுத்தும் திட்டத்தைமொன்றை மேற்கொள்வதற்கு 12 மாத கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 25 முதல் 50 மில்லியன் ரூபா வரையிலான கடனாளிகளுக்கு 9 மாத கால நீடிப்பும், ஏனைய கடனாளிகளுக்கு 6 மாத கால நீடிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திகதியை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, இந்த நீண்டகால பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் காணப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பங்குதாரர் குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

அத்தோடு, வணிகங்களுக்கு நிவாரணம் என்பது கால நீட்டிப்பு மூலம் மட்டும் அல்ல என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியால் செயல்படுத்தப்பட்ட நிவாரண தொகுதியில், குறைந்த வட்டி விகிதங்கள், திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்தல், கடன் மதிப்பீடுகளில் தளர்வு மற்றும் மதிப்பீட்டு சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான வெளிப்படையான பொறிமுறையை வழங்குதல் போன்ற பல முக்கியமான நடவடிக்கைகளும் அடங்கும்.

பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயலூக்கமான பங்களிப்பை உறுதி செய்வதே இந்த நிவாரண நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.